ஓவியக் கலையில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மற்றுமோர் தமிழ் மாணவி
யாழ். இராமநாதன் பல்கலைக்கழகத்தின் சித்திரக்லையில் இறுதி கல்வியாண்டில் பயிலும் யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வி ஜனனி பிரேம் அவர்களின் கைவண்ணத்தில் பல அழகிய ஓவியங்களை வரைந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
அவரின் கைவண்ணத்தில் வரையப்பட்ட சில ஓவியங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதாவது யாழ் மந்திரிமனை, நல்லூர் கந்தசாமி ஆலயம் உட்பட பல ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் மாணவ மாணவிகள் பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் திறமைகளையும் சாதனைகளையும் உலகறியும் வகையில் நாம் எமது இணையத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இவ்வாறு பல சாதனைகள் படைத்து வரும் மாணவ மாணவிகளின் தகவல்களையும் எமக்கு WhatsApp (0094750559346) மூலம் அனுப்பி வையுங்கள். அவர்களின் திறமைகளையும் உலகறிய கொண்டு சேர்ப்பது எமது நோக்கமாகும்.