இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள்
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நடைபெறவுள்ளது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மார்ச் மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இந்த கண்காட்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.
குறித்த விடையம் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இலங்கை விமானப்படையுடன் இணைந்து யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் இந்த கண்காட்சில் இணைந்துள்ளது.