Welcome to Jettamil

மட்டக்களப்பு பெண்கள் கொலை வழக்கு: 4 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! நகைக்கடை உரிமையாளர்களுக்குப் பிணை

Share

மட்டக்களப்பு பெண்கள் கொலை வழக்கு: 4 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! நகைக்கடை உரிமையாளர்களுக்குப் பிணை

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு, நகைகளுக்காகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று நீதிமன்றத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த போதிலும், விடயத்தின் பாரதூரத் தன்மையைக் கருத்திற்கொண்டு சந்தேக நபர்கள் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொள்ளையிடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மாதம் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவர் உயிருடனும், காணாமல் போன வேறொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.

இந்தத் திட்டமிட்ட கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக வவுணதீவு பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயக்க மருந்து கொடுத்துப் பெண்களைக் கடத்தி, நகைகளைக் கொள்ளையடித்த பின் அவர்களைக் கிணற்றில் வீசியது விசாரணைகளில் அம்பலமானது. கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை