60 லட்சம் யூதர்களின் நினைவாக ஒலித்த சைரன் – இரண்டாம் உலகப்போர் வடுக்களை நினைவுகூர்ந்த இஸ்ரேல் மக்கள்
இரண்டாம் உலகப்போரின் போது நாஜிப் படைகளால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட 60 லட்சம் யூதர்களின் நினைவாக, இஸ்ரேல் முழுவதும் இன்று இரண்டு நிமிடங்களுக்கு நினைவுச் சைரன் ஒலிக்கப்பட்டது.
இந்த சைரன் ஒலித்தபோது, வீதிகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் என அனைவரும் இருந்த இடத்திலேயே எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இஸ்ரேலின் இந்த நினைவு தினம் (Memorial Day), ஒரு தேசமே தனது கடந்த கால வலியை எப்படி நினைவுகூர்கிறது என்பதற்குச் சான்றாக அமைந்தது.
யேட் வஷேம்’ (Yad Vashem) நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், தங்கள் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறக்காமல் இந்த ஆண்டு நினைவு தினம் உணர்வுப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
இது யூத இனத்தின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் உறுதியை மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்தது.
Saurce : Reuters





