Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

சாணக்கியன் ஒரு தௌவல் – நகைத்த சரவணபவன்!

20241023 122234

சாணக்கியன் ஒரு தௌவல் – நகைத்த சரவணபவன்!

சாணக்கியன் ஒரு தௌவல். அவருக்கு நல்ல குரல்வளம் உள்ளது. ஆட்களை கவரக்கூடிய கவர்ச்சித் தன்மை உண்டு. அதை சரியாக பாவித்தால் சாணக்கியன் ஒரு தலைவராக வரலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் “இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரான திரு.சிறிநேசன் அவர்கள், திரு.பா.அரியநேந்திரன் அவர்களை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவோ, கட்சியின் நிகழ்வுகளில் ஈடுபடுத்தவோ கூடாது. அவர் தமிழரசுக் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர். அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் எனவே அவரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்த கூடாது என சாணக்கியன் கூறியுள்ளார். இது குறித்து தங்களது கருத்து என்ன என வினவியவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரசார மேடையில் யாரும், யாருக்காகவும் பேசலாம், யாருக்கும் ஆதரவு வழங்கலாம். இன்று சிறிநேசனும் சாதாரண ஆள் தான், சாணக்கியனும் சாதாரண ஆள் தான், நானும் சாதாரண ஆள் தான். எனக்கு ஆதரவாக கடந்த காலங்களில் விடுதலை போராளிகள் மேடையேறி பேசினார்கள், இனியும் பேசுவார்கள். அந்தவகையில் அரியநேந்திரன் யாருக்கு ஆதரவாகவும் பேசலாம். எனவே கட்சிக்கும், ஒழுக்காற்று நடவடிக்கைக்கும், பிரசார நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

சிறீதரன் அவர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதெல்லாம் இனி வருடக்கணக்கில் கிடப்பில் போடப்படும். ஏனென்றால் இதற்கு 10 வருடங்களுக்கு முன்னர் சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை கொண்டுவரப்பட்டது. தமிழரசு கட்சியில் இருக்கின்ற நிர்வாகிகள் தமக்கு ஏற்ற நேரத்தில் ஒரு வருடத்திலும் முடிப்பார்கள், 10 வருடத்திலும் முடிப்பார்கள்.

எனவே இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. அரியநேந்திரனுக்கு எல்லா ஜனநாயக உரிமைகளும் உள்ளன. எந்த மேடையிலும் ஏறி யாருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யலாம், இது கட்சி மேடை அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment