மன்னாரில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட குழந்தையின் சடலம்! – காவல்துறையின் விசாரணையில் சந்தேகம்?
மன்னார் தாராபுரம் கிழக்கு துருக்கி சிற்றி பகுதியில், கடந்த 18-ஆம் திகதி பாண் விற்பனைக்காக வந்த முச்சக்கர வண்டி மோதியதில், ஒரு வயது 7 மாதங்கள் உடைய சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 19-ஆம் திகதி தாராபுரம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எனினும், இச்சம்பவம் குறித்து மன்னார் காவல்துறையினர் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான முறைப்பாட்டை ஆராய்ந்த மன்னார் நீதவான் நீதிமன்றம், உயிரிழந்த குழந்தையின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டது.
Source : IBC





