மகளின் மறைவுக்குப் பின் கடவுளை மறந்த சின்னக்குயில்! 15 ஆண்டு கால மௌனத்தை உடைத்த பாடகி சித்ரா
2011-ஆம் ஆண்டு துபாயில் தனது 9 வயது மகள் நந்தனாவை இழந்த பாடகி சித்ரா, அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் 15 ஆண்டுகளாகத் தவித்து வருகிறார்.
“யாரையாவது நான் காயப்படுத்தினேனா? ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளை நோகடித்தது சாபமாக மாறிவிட்டதோ?” எனத் தன்னைத் தானே நொந்து கொண்டதாகச் சித்ரா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மகளின் மறைவுக்குப் பிறகு எந்தக் கோயிலுக்கும் செல்லாமல், யாரையும் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததாக அவர் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
இசை உலகமே சித்ராவைத் தேற்றிய நிலையில், லதா மங்கேஷ்கர் நேரில் அழைத்து வழங்கிய விருதும், இசைஞானி இளையராஜாவின் வேண்டுகோளுமே அவரை மீண்டும் மேடைக்குக் கொண்டு வந்துள்ளன.
“வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால் நம்முடன் இருப்பவர்களின் வாழ்க்கையும் கஷ்டமாகும் என்பதை உணர்ந்தேன்” என அவர் கூறியுள்ளார்.
ஒருமுறை திருச்சூரில் தங்கியிருந்தபோது, குருவாயூர் கோயில் நடைக்கு அருகில் அறை அமைந்ததை ‘கடவுளின் அழைப்பாக’ உணர்ந்து, மீண்டும் இறை நம்பிக்கையைப் பெற்றதாகச் சித்ரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.




