Welcome to Jettamil

அஷ்ட லட்சுமியின் அருளை பெற்று தரும் சித்திரை வளர்பிறை பஞ்சமி வழிபாடு

Share

அஷ்ட லட்சுமியின் அருளை பெற்று தரும் சித்திரை வளர்பிறை பஞ்சமி வழிபாடு

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி திதி இன்று காலை 8.47 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை காலை 6.25 மணி வரை நீடிக்கிறது.

வாராகி அம்மனை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படும் இந்த பஞ்சமி திதியில், மனதாரப் பிரார்த்தனை செய்தால் தீய சக்திகள் அகன்று நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி, வீட்டு நிலை வாசலைச் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். ஒரு தட்டில் மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த நீரை ஊற்றி, அதன் மேல் அகல் விளக்கேற்றி நிலைவாசலின் வலதுபுறம் அல்லது இருபுறமும் வைக்க வேண்டும்.

குறைந்தது 48 நிமிடங்கள் எரிய வேண்டிய இந்த தீப வழிபாட்டின் போது, குலதெய்வத்தையும் வாராகி அம்மனையும் நினைத்து ‘ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமக’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது சிறந்தது.

செவ்வரளி போன்ற சிவப்பு நிற மலர்களைச் சூட்டி, கற்கண்டு அல்லது பழங்களை நைவேத்தியமாகப் படைத்து வழிபட்டால், எதிரிகள் பலமிழப்பார்கள்; வாழ்வில் செல்வம் பெருகும் என ஆன்மீகப் பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை