Welcome to Jettamil

கோட்டா பதவி விலகாததால் குழப்பநிலை அதிகரிப்பு

Share

கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே வாக்குறுதி அளித்த படி ஜூலை 13ஆம் திகதியான நேற்று பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைக்காததால், நாட்டில் குழப்பநிலை அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பாக தங்குமிடம் ஒன்றை சென்றடைந்த பின்னரே, பதவி விலகல் கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச சமர்ப்பிப்பார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிவு வரை அவரால் மாலைதீவை விட்டு வெளியேற முடியவில்லை.

இதனால் அவரது பதவி விலகல் கடிதத்தை எதிர்பார்த்திருந்த அரசியல் கட்சியினர் மற்றும் போராட்டக்காரர்கள் குழப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இன்று சிங்கப்பூரை சென்றடைந்த பின்னர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பார் என்றும் அவ்வாறு அனுப்பாவிட்டால், தாம் பதவி விலகுவதாகவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதி நாட்டில் இல்லாத போதும், அவர் தனது அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பதாக, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை நேற்றுமாலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தான் இலங்கைக்கு வெளியே இருப்பதன் காரணமாக  பதவிக்குரிய தத்துவங்கள் பணிகளை கடமைகள் புரிவதற்கு இயலாதென கருதுவதனால், தான் இலங்கைக்கு வெளியே இருக்கும் காலப்பகுதியில் அவற்றை பிரயோகிப்பதற்கான கடமை புரிவதற்கான அதிகாரங்களை பிரதமருக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை