Jet tamil
இலங்கை

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய சுரேந்திரன்!

VideoCapture 20241110 092940

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய சுரேந்திரன்!

சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பி, எங்களுக்குள்ளே இருக்கக்கின்ற, கையூட்டுக்கு மயங்கக்கூடிய, சொற்படிவித்தைகளுக்கு மயங்கக்கூடிய, எதற்கும் விலை போகக்கூடிய அயோக்கியர்களை இனம் கண்டு அவர்களுடாக எங்களுடைய வெற்றி வேட்பாளர்களுக்கு எதிராக சேறு பூசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறு ரெலோ அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு (09) அராலியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்னணியிலே பல நிதி மோசடியில் ஈடுபட்டவர்களும், பல குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும், அவர்களை காப்பாற்றுவதற்காக சட்டத்தை பயன்படுத்துபவர்களும் இணைந்து இந்த அவதூறுகளை பரப்புவதில் முன்னணி வகிக்கின்றார்கள்.

காகம் சங்கை திரும்பிப் பார்த்து கறுப்பு என்று சொல்வது போல குற்றவாளிகளாக சிறையிலே மூன்று வருடங்களுக்கு மேலே தனது வாழ்க்கையை கழித்தவர்களும், பல குற்றங்களை புரிந்து கொண்டிருப்பவர்களும், தாங்கள் அடுத்தவர்களை குற்றவாளியாக்கிவிட்டால் தாங்கள் சுற்றவாளியாகி விடுவார்கள் என்று கற்பனையிலே மற்றவர்கள் மீது குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

தென் இலங்கையின் சதித்திட்டத்திற்கும், கையூட்டுக்களுக்கு மயங்கியவர்கள் போன்றோரை நீங்கள் இனம் கண்டு, உங்களுடைய வாக்குகளை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment