யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளது. இதனால் வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி சந்தையின் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
ஒரு கிலோ கரட் – 70, உருளைக்கிழங்கு – 120, கத்தரி – 200, நீர்த்தேக்காய் – 80, வாழைக்காய் – 150, கருணைக்கிழங்கு – 80, கீரை – 50, உருளைக்கிழங்கு – 120 போன்றன இவ்வாறான விலைக்கு விற்பதால் வியாபாரத்தில் இலாபம் ஈட்ட முடியவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
அத்துடன் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏனைய தொழில் துறையும் பாதிக்கப்பட்டதன் விளைவும் வியாபாரம் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்தனர்.