நாளாந்த மின்சார பாவனைக்கான தேவை கடந்த இரண்டு மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறுகையில், ஒரு வருடத்திற்கு முன்னர் நாளாந்த மின்சார பாவனை 48 முதல் 49 மில்லியன் யூனிட் மின்சாரமாக இருந்தது.
எனினும், நாளொன்றுக்கு 38 முதல் 39 மில்லியன் யூனிட் வரை மின்சாரம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.