சுடர் ஒளி பாடசாலையின் கலைவிழாவும் கெளரவிப்பும்
யாழ். தென்மராட்சி மீசாலை வடக்கு “சுடர் ஒளி” பாலர் பாடசாலையின் கலைவிழாவும், கெளரவிப்பு நிகழ்வும் பாலர் பாடசாலை மண்டபத்தில் இன்று (31) இடம்பெற்றது.
நிகழ்விற்கு விருந்தினர்களாக தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன், பாரதி இன்ஸ்ரிரியூட் இணை இயக்குநர் திருமதி துஷியந்தி ரஜனிகாந்தன், தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி மேற்பார்வையாளர் திருமதி இராசலட்சுமி மயில்வாகனசிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் சபையை அலங்கரித்தன.
2024 ஆம் ஆண்டு புதிய வருடத்தில் தரம் ஒன்றிற்கு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான கெளரவிப்பும் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டன.