Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை மேற்கொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமான இந்த பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது.

பின்னர் ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மகஜர் ஒன்று ஆளுநரின் பிரதிச் செயலாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் உள்ளடங்கிய ஐந்து அம்சக் கோரிக்கைகளாவன

1.புதிதாக உருவாக்கப்பட்ட மீனவர் சட்ட வரைபை நிராகரித்தல்

2.வெளிநாட்டு மீன்கள் இறக்குமதி செய்தலை நிறுத்தல்

3.வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது.

4.வெளிநாட்டு படகுகளில் இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரல்

5.கடற்றொழிலாழர்களுக்கான வரவு-செலவு திட்டத்தை மீள்பரிசீலிக்க கோரல் – என்பனவாகும்.

இந்த கவனயீர்ப்பு பேரணியில் ஊர்காவற்துறை கடற்றொழில் சமாசத்தின் செயலாளர் அ.அன்னராசா, கிளிநொச்சி மாவட்ட சமாச தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் எம்.தணிகாசலம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ராஜா குருஸ், மன்னார் மாவட்ட பிரதேச சமாச தலைவர், ஜே.ஜோகராஜ் மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடப்பட்டனர்.

Related posts

எரிபொருள் விலை குறித்து வெளியான தகவல்

Sinthu

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

Leave a Comment