Welcome to Jettamil

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

petrol

Share

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 92 ரக ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 398 ரூபாவாகும்.

இதேபோல், 95 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 382 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 90 ரூபாவால் உயர்த்தப்பட்டு 443 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 255 ரூபாவாகும்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் வகைபழைய விலை அதிகரிப்பு (ரூ.)புதிய விலை (ரூ.) 
பெட்ரோல் 92 ஒக்டேன்317.0081.00398.00 
பெட்ரோல் 95 ஒக்டேன்365.00 90.00 455.00
ஒட்டோ டீசல்303.00 79.00382.00
சுப்பர் டீசல் 353.0090.00443.00
மண்ணெண்ணெய் 195.00 60.00 255.00

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை