தங்கம் விலையில் கடும் சரிவு! மூன்று நாட்களில் 29,000 ரூபா வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு இணையாக, இலங்கையிலும் கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் பதிவாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் இன்று (21) சனிக்கிழமை வரையிலான மூன்று தினங்களில் மாத்திரம் ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 29,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமை 13,000 ரூபாவாலும், நேற்று வெள்ளிக்கிழமை 6,000 ரூபாவாலும் தங்கம் விலை வீழ்ச்சியடைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் (21) விலை மேலும் 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 டொலர் எல்லைக்குக் கீழ் சரிவடைந்தமையே உள்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றத்திற்கு முக்கிய காரணம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் விலை தற்போது சடுதியாகக் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து நகைக்கடைகளில் கொள்வனவு நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை மேலும் குறையுமா என்பது குறித்துப் பலரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.





