பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.