Welcome to Jettamil

நிலத்தடியில் மறைந்திருக்கும் ஈரானின் ‘ஏவுகணை நகரங்கள்’ குறித்து சர்வதேச கவனம்

Share

நிலத்தடியில் மறைந்திருக்கும் ஈரானின் ‘ஏவுகணை நகரங்கள்’ குறித்து சர்வதேச கவனம்

ஈரானின் ஏவுகணை தளங்களில் பல சேதமடைந்திருந்தாலும், நிலத்தடியில் உள்ள சில தளங்களை மீண்டும் செயல்படுத்தும் திறன் இருப்பதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடுகளின்படி, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள பல ஏவுதளங்களைப் பழுதுபார்த்து மீள இயக்கக்கூடிய திறன் ஈரானிடம் இன்னும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கு முன்னைய நிலையை விட தற்போது ஈரானிடம் பாதி அளவு ஏவுகணைகளே எஞ்சியிருந்தாலும், மறைவிடங்களிலிருந்து வெளியே எடுக்கக்கூடிய ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஈரானின் வசமுள்ள

நிலத்தடி ‘ஏவுகணை நகரங்களில்’ இருந்து இவற்றை எப்போது வேண்டுமானாலும் ஏவ முடியும் என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஈரானின் இந்த ராணுவ பலம் மத்திய கிழக்கின் பாதுகாப்பிற்கு இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது.

தற்போது இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் தற்காலிகப் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, ஈரான் தனது ஏவுகணைக் கையிருப்பை மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் எனச் சில அமெரிக்க அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை