Jet tamil
இலங்கை

மன்னார் மாவட்ட அரச அதிபராக கடமையினை பொறுப்பேற்ற க.கனகேஸ்வரன் அவர்களுக்கு கௌரவிப்பு

மன்னார் மாவட்ட அரச அதிபராக கடமையினை பொறுப்பேற்ற க.கனகேஸ்வரன் அவர்களுக்கு கௌரவிப்பு

யாழ்ப்பாணம் தென்மராட்சி மண்ணில் இருந்து மன்னார் மாவட்ட அரச அதிபராக கடமையினை பொறுப்பேற்ற க.கனகேஸ்வரன் (இலங்கை நிர்வாக சேவை – விசேட தரம்) அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 7/1/2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொடிகாமம் ஏ9 வீதியில் அமைந்துள்ள நட்சத்திரமஹால் மண்டபத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் அ.கயிலாயபிள்ளை தலைமையில் இடம் பெற்றது

தென்மராட்சி மக்களும் பொது அமைப்புக்களும் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் அவரது தாயார் க.கனகம்மா மற்றும் மதகுருமார்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு அரச அதிபர்கள் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் விரிவுரையாளர்கள் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமயப் பெரியோர்கள் தென்மராட்சி ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

மாலை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி வாழ்த்துப் பாமாலை வழங்கி விழா நாயகன் கௌரவிக்கப்பட்டதோடு அவரது பாரியாரும் தாயாரும் கௌரவிக்கப்பட்டனர்.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment