டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிசாரால் நெல்லியடியில் சிரமதானம்
தற்போது மிக தீவிரமாக பரவிவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்றையதினம் நெல்லியடி பொலிசாரால் கரவெட்டி ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காஞ்சனா விமலாவீரா தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டனர்.