Welcome to Jettamil

நுவரெலியாவில் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்! இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் நேரடி ஆய்வு

Share

நுவரெலியாவில் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்! இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் நேரடி ஆய்வு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றங்களைப் பார்வையிடுவதற்காக, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (20) திங்கட்கிழமை நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்திய வம்சாவளி தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்திட்டமானது வெறும் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், மலையக மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஒரு பலமான அடித்தளமாக அமையும் எனத் துணை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை