Jet tamil
இந்தியாமுக்கியச் செய்திகள்

சாந்தனை கொன்றது மத்திய-மாநில அரசுகள் தான் – சீமான் காட்டம்

சாந்தனை கொன்றது மத்திய-மாநில அரசுகள் தான் – சீமான் காட்டம்

இலங்கை செல்லவிருந்த நிலையில் உடல்நலக் குறைவால் காலமான சாந்தனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட இரங்கல்செய்தியில்,

“எமது அன்புத்தம்பி சாந்தன் நிறைவு பெறாத நீதி விசாரணை காரணமாக கொடூர மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறை வாழ்க்கையுடன், வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழ கொடூர தண்டனை வழங்கி தண்டித்தது இந்த நாடு.

மிகுந்த சட்டப் போராட்டங்களின் பின் மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையில் இருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டினை ஆளும் தி.மு.க அரசு சிறிது கருணையின்றி சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமில் அடைத்து சிதைத்து இன்று தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது.

சாந்தனை உயிரோடு இலங்கைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றுள்ளது இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும்.

தான் பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண்டுமென்ற 33 ஆண்டுகளுக்கும் மேலாக கவலை தோய்ந்த இதயத்தோடு காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் கடைசிவரை நிறைவேறவில்லை என்பதுதான் பெரும் துயரம்.

அன்புத்தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரின் தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இந்த சூழலில் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்ட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது தி.மு.க அரசு உடன் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், எமது அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுன்னாகம் பகுதியில் போலீசாரின் கொடூர தாக்குதல்

kajee

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

jettamil

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

kajee

அரசாங்க அதிபர் கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பினை நேரில் ஆராய்வு

kajee

ஜனாதிபதி அநுர – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

kajee

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

kajee

Leave a Comment