Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

கச்சதீவினை நோக்கி யாழ் மாவட்ட செயலக மற்றும் நெடுந்தீவு பிரதேச நிர்வாக அதிகாரிகள் தீடீர் விஜயம்

கச்சதீவினை நோக்கி யாழ் மாவட்ட செயலக மற்றும் நெடுந்தீவு பிரதேச நிர்வாக அதிகாரிகள் தீடீர் விஜயம்

எதிர்வரும் பங்குனிமாதம் 09,10 ஆகிய திகதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள விஜயம் இன்று இடம்பெற்றது.

குறித்த களவிஜயமானது எழுவைதீவில் இருந்து கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயம் வரை கடற் வழிமார்க்கமாக இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீமோகனன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் அ.ஜெயகாந்தன், நெடுந்தீவு பங்கு நிலை அருட்சகோதரர். பீ.பீற்றர் ஜெயநேசன் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினரும், மற்றும் தீவக கடற்படையின் பிரதான கண்காணி ப்பாளர் வைல்ட் பெணாண்டோ மற்றும் கடற்படையினர்கள் இவ் விஜயத்தில் கலந்துகொண்டனர்.

இவ் விஜயத்தின் போது வருடாந்த பெருந் திருவிழாவில் இந்திய ,இலங்கை மக்களின் வருகையும், அவர்களுக்கான தங்குமிடவசதிகள், தேவாலயத்தின் துப்பரவுப்பணிகள், மருத்துவசதி உதவிகள், குடிநீர் பெற்றுக்கொடுத்தல், சிற்றுண்டி வசதிகள்,படகுசேவை போக்குவரத்து ஒழுங்குகள் இதர பாதுகாப்பு வசதி வாய்ப்புக்கள் பற்றி இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலக, நெடுந்தீவு பிரதேச தலைமை நிர்வாக அதிகரிகளினால் எடுத்துக்கூறப்பட்ட விடயங்களில் இலங்கை கடற்படையினர்கள் அதற்கான முழுமையான பங்களிப்பினை வழங்குவதாக தீவக கடற்படையின் பிரதான கண்காணிப்பாளர் வைல்ட் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment