Welcome to Jettamil

வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன்

Share

வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன்

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில், வர்த்தகப் பிரிவில் தமிழ் மொழி மூலம் தோற்றிய காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்துப் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த மாணவன் முஹமட் பர்தானுக்கும், இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவரது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் சமூகத்தின் பல தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றிரவு வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் விபரங்கள் வௌியாகியுள்ளன.

பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை (Index Number) உள்ளிடுவதன் மூலம் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களில் தமது முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை