இரண்டு வாரங்களில் தெஹ்ரானைக் கைப்பற்றுவேன் என்ற உகாண்டா தளபதிக்கு கிம் ஜாங் உன் விடுத்த மரண எச்சரிக்கை
உகாண்டா ராணுவத் தளபதி முஹூசி கைனெருகபா (Muhoozi Kainerugaba) வெளியிட்டுள்ள ஒரு கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“வெறும் இரண்டு வார காலத்திற்குள் ஈரான் தலைநகர் தெஹ்ரானை எமது படைகள் கைப்பற்றும்” என அவர் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடான உகாண்டாவிலிருந்து வந்துள்ள இந்த மிரட்டல் உலக அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
உகாண்டா தளபதியின் இந்தப் பேச்சிற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். உகாண்டா தளபதியின் கருத்தை முற்றாக நிராகரித்துள்ள கிம், “உடனடியாக அந்தப் பொறுப்பற்ற கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் நாட்டுடன் வடகொரியா கொண்டுள்ள நீண்டகால நட்பு உறவைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரானுக்கு எதிராக விடுக்கப்படும் எந்தவொரு மிரட்டலையும் வடகொரியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் போராடி வரும் வேளையில், வடகொரியா ஈரானுக்குத் தனது முழுமையான ஆதரவை வௌிப்படுத்தியுள்ளது.
உகாண்டா போன்ற நாடுகள் இவ்வாறான மோதல்களில் தலையிடுவது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கிம் ஜாங் உன்னின் இந்த நேரடித் தலையீடு, ஈரானியத் தரப்பிற்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.





