Welcome to Jettamil

ஏப்ரல் 1 முதல் அதிரடியாக உயருகிறது மின் கட்டணம் – வெளியான முக்கிய அறிவிப்பு

Share

ஏப்ரல் 1 முதல் அதிரடியாக உயருகிறது மின் கட்டணம் – வெளியான முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் கட்டண உயர்வுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, புதிய கட்டணத் திருத்தம் வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. குறைந்த அலகுகளைப் பயன்படுத்துவோர் முதல் தொழிற்சாலைகள் வரை அனைவரும் இந்த விலை உயர்வைச் சந்திக்க வேண்டியுள்ளது.

புதிய திருத்தத்தின்படி, 30 அலகுகளுக்குக் கீழ் பயன்படுத்துவோருக்கு 4.3 சதவீதமும், 30 முதல் 90 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 6.9 சதவீதமும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்குப் பாரிய இடியாக 25 சதவீதத்தினால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நடுத்தர மற்றும் உயர்மட்ட வருமானம் கொண்ட குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

அதாவது, 30 அலகுகளுக்கு 15 ரூபாயும், 60 அலகுகளுக்கு 45 ரூபாயும் மேலதிகமாக அறவிடப்படவுள்ளது. 180 அலகுகளுக்கு உட்பட்டோர் 420 ரூபாயை மேலதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் அதேவேளை, அதற்கு மேல் பயன்படுத்துவோருக்கான கட்டணம் ஆயிரக்கணக்கில் உயர வாய்ப்புள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடும் போர்க்காலச் சூழலும் மின்சார உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்குக் காரணம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யூனிட்கள்கட்டண  உயர்வு அதிகரிப்பு
0–30 யூனிட்கள்கட்டணங்கள் 4.3% உயரும் ரூ. 15 அதிகரிக்கும்.
31 முதல் 60 யூனிட்கள்கட்டணங்கள் 6.9% உயரும்ரூ. 45 அதிகரிக்கும்.
61 முதல் 90 யூனிட்கள்கட்டணங்கள்  6.9% உயரும்ரூ. 120 அதிகரிக்கும்.
91 முதல் 120 யூனிட்கள்கட்டணங்கள்  7.1% உயரும், ரூ. 420  அதிகரிக்கும்.
180 யூனிட்டுகளுக்கு மேற்பட்ட நுகர்வுக்குகட்டணங்கள்  25% உயரும், – 

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை