Welcome to Jettamil

பிள்ளையார் கோவில் மாம்பழம் 50 இலட்சத்திற்கு ஏலம்! கிளிநொச்சியில் நடந்த வியக்கத்தக்க சம்பவம்

Share

பிள்ளையார் கோவில் மாம்பழம் 50 இலட்சத்திற்கு ஏலம்! கிளிநொச்சியில் நடந்த வியக்கத்தக்க சம்பவம்

கிளிநொச்சி, பரந்தன் 3-ம் வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.

திருவிழாவின் 5-ம் நாளான நேற்றிரவு (10), விநாயகர் பெருமானுக்குச் சாத்தப்பட்ட மாம்பழம் ஏலம் விடப்பட்டது. இதில் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டிக்கு மத்தியில், ஒரு மாம்பழம் 50 இலட்சத்து 6,000 ரூபா என்ற பிரம்மாண்டத் தொகைக்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் பெரும் தொகையினைக் கொடுத்து இருவர் இணைந்து அந்தப் புனிதமான மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை