முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்! – ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக முதல்வர் விஜய் உருக்கமான அறிக்கை!
ஈழ மண்ணில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று உலகெங்கும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்துத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் விசேட அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், “முள்ளிவாய்க்கால் நினைவை எப்போதுமே எமது இதயத்தில் ஏந்துவோம்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக எதிர்கொண்ட துயரங்கள் மற்றும் இழப்புகள் எவராலும் என்றுமே மறக்க முடியாதவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து தனது அறிக்கையில், “உலகம் முழுவதும் பரவி வாழும் எமது தமிழ்ச் சொந்தங்களின் உணர்வுகளுடன் நாம் எப்போதும் இணைந்திருக்கிறோம்.
கடல் கடந்து பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வுரிமை, அரசியல் உரிமைகள் மற்றும் நீதிக்கான போராட்டங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகமும், நமது அரசும் எப்போதும் உறுதுணையாகத் துணை நிற்கும்” எனப் பலமாகத் தனது ஆதரவுக் குரலைப் பதிவு செய்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிக்கை உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





