Jet tamil
இலங்கை

மதுபானம் மற்றும் சிகரெட் விலை மீண்டும் உயர்வு…?

மதுபானம் மற்றும் சிகரெட் விலை மீண்டும் உயர்வு…?

இந்த ஆண்டு மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்தையோ அல்லது மதுபானத்திற்கு மது வரி விதிக்கும் முறையையோ முன்மொழிந்துள்ளதால்,

விலைகள் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பினால் அரசாங்கத்திற்கான வரி வருமானம் அதிகரித்து நுகர்வு குறைவதால்,

மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்படும் தொகை குறைவாகவே காணப்படுவதாக சம்பத் டி சேரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் மதுவரி 10% அதிகரிக்கப்பட்ட போது மது பாவனை 11.7% குறைந்துள்ளதாக ஆய்வுகள் மற்றும் எதிர் நடவடிக்கைகளுக்கான நிலையம் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment