மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சர ஆலயத்தில் மாசி மக உற்சவம் நேற்று திங்கட்கிழமை(6) சிறப்பாக இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது இன்று அதிகாலை திரு வானந்தலைத் தொடர்ந்து எம்பெருமான் கௌரி அம்மை உடனாய திருக்கேதீச்சரப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை சாந்திப் பூஜை வசந்த மண்டப பூஜை வழிபாட்டுடன் சுவாமி எழுந்தருளி தீர்த்த உற்சவத்தை மகிமையுறச் செய்ய பாலாவி தீர்த்தகரை புறப்பட்டு தீர்த்த பூஜையுடன் திருவிழா சிறப்புற நிறைவு பெற்றது.