Welcome to Jettamil

மீகொட தன்சல் கோர விபத்து: 6 பேரை பலிகொண்ட சாரதி பற்றி வெளியான அதிரடித் தகவல்கள்

Share

மீகொட தன்சல் கோர விபத்து: 6 பேரை பலிகொண்ட சாரதி பற்றி வெளியான அதிரடித் தகவல்கள்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான மீகொடவில், ரொட்டி தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது Car மோதி 6 பேர் உயிரிழந்த கொடூர விபத்து தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள சாரதி குறித்த பல அதிர்ச்சித் தகவல்களைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 31ஆம் திகதி இரவு நிகழ்ந்த இந்த விபத்தில் 15, 32, 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர். இதில் பிலியந்தலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அடங்குவர்.

அத்துடன் பாதுக்க பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களும் இதில் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய பிலியந்தலையைச் சேர்ந்த 42 வயதுடைய வாடகை கார் சாரதியை, பொலிஸாரும் இளைஞர்களும் துரத்திச் சென்று கொடகம சந்திப்பில் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் கடுமையான மதுபோதையில், சுயநினைவின்றி சிரித்துக்கொண்டே இருந்துள்ளார்.

அவிசாவெல்லை பகுதியில் நள்ளிரவு வரை மது அருந்திவிட்டு கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்துள்ளார். வழியிலும் இருவரை மோதிவிட்டு நிறுத்தாமல் வந்துள்ளார். மீகொட சந்திப்பில் தன்சல் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்து, வேண்டுமென்றே வரிசையில் நின்ற மக்கள் மீது வாகனத்தை அதிவேகமாக மோதியது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

சந்தேகநபர் ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது விபத்தைத் தவிர்க்கத் தவறியமை, அஜாக்கிரதை, அதிவேகம் மற்றும் குடிபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உரிமம் இல்லாதவரிடம் வாகனத்தைக் கொடுத்த குற்றத்திற்காக அதன் உரிமையாளர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை