ஜப்பான் மற்றும் சீன அரசாங்கங்களின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சர்ச்சைக்குரிய கிழக்கு சீனக் கடலில் கடல் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த சீனத் தூதுக்குழுவின் தலைவர் ஹொங் லியான், ஜப்பானுடன் கடற்படை ஒத்துழைப்பைப் பேண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தைவானைச் சுற்றி சீனா மேற்கொள்ளும் இராணுவப் பயிற்சிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக ஜப்பானிய தூதுக்குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.