Jet tamil
இலங்கை

10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு

10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு

பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மின்கட்டணம் செலுத்தாத 10,64 400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மின்கட்டண அதிகரிப்பு, மின் விநியோகத்துண்டிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நாட்டில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 7,603,923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

இதேவேளை மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை.

எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும்.

மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் தீர்மானம் கடந்த டிசெம்பர் 5 ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரத்துடன் எடுக்கப்பட்டது.

கட்டண திருத்தத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது ஓர் ஊடக காட்சிப்படுத்தல் ஊடக காட்சிப்படுத்தலில் ஜே .வி.பி.தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.” என்றார்.  

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment