Welcome to Jettamil

தீயில் கருகி தாயும் மகளும் பரிதாப பலி – திட்டமிட்ட கொலையா? தந்தை மற்றும் வீட்டு உரிமையாளர் கவலைக்கிடம்

Share

தீயில் கருகி தாயும் மகளும் பரிதாப பலி – திட்டமிட்ட கொலையா? தந்தை மற்றும் வீட்டு உரிமையாளர் கவலைக்கிடம்

கொழும்பு, பமுனுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீடு ஒன்றில் இன்று அதிகாலை திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த கோரத் தீ விபத்தில் சிக்கி 55 வயதுடைய தாயும், அவரது 16 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் 76 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தத் தீ விபத்து விபத்தினால் ஏற்பட்டதா அல்லது எவராவது திட்டமிட்டுச் செய்த கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை