முல்லைத்தீவு பாடசாலையில் மாணவர்கள் குழுக்களாக மோதல் ஒருவர் வைத்தியசாலையில்!
முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
முல்லைத்தீவு விசுவமடு வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர்.
குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசாரால் ஒரு மாணவன் கைதுசெய்துள்ள நிலையில். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படவுள்ளார்.
குறித்த பாடசாலையின் பல்வேறுபட்ட நிர்வாக நிதி மோசடிகள் தொடர்பில் ஏற்க்கனவே பல செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.