Welcome to Jettamil

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் தேசிய QR ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் தேசிய QR ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

தேசிய QR கட்டண ஊக்குவிப்புத் திட்டத்தை (National QR Payment Promotion Programme) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (06.04.2026) ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 5,000 ரூபாய் வரையான LankaQR பணப்பரிமாற்றங்களுக்குச் சேவைக்கட்டணம் வசூலிப்பதில்லை என அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதன்படி, சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வித மேலதிக செலவுமின்றி டிஜிட்டல் முறையில் பணத்தை அணுப்பவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியும்.

இதுவரை காலமும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ‘மேர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட்’ (MDR) எனும் சேவைக்கட்டணத்தை, 5,000 ரூபாவிற்கு உட்பட்ட அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் முழுமையாக நீக்க நிதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இது இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதன் மூலம் பெட்டிக்கடைகள் முதல் நடுத்தர வர்த்தக நிலையங்கள் வரை எவ்வித நஷ்டமுமின்றி டிஜிட்டல் முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நாணயத்தாள்களின் பயன்பாட்டைக் குறைத்து, காகிதமற்ற (Cash-lite) பொருளாதாரத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது இலங்கையில் 89% மக்கள் வங்கி வசதிகளைக் கொண்டுள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் இடங்களில் LankaQR வசதி நடைமுறையில் உள்ளது. 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த டிஜிட்டல் புரட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை