Welcome to Jettamil

ஈரானிய வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட இஸ்ரேலிய ‘ஆர்பிட்டர்’ ட்ரோன்!

Share

ஈரானிய வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட இஸ்ரேலிய ‘ஆர்பிட்டர்’ ட்ரோன்!

ஈரானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிக முக்கிய மூலோபாயப் பகுதியான கெஷ்ம் தீவுக்கு (Qeshm Island) மேல் பறந்து உளவு பார்த்த இஸ்ரேலிய ஆர்பிட்டர் ரக ட்ரோன் (Orbiter Drone) ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் இராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை ஈரானிய இராணுவம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, அதிகாலை வேளையில் கெஷ்ம் தீவின் வான் பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பறந்த அந்த இலகுரக ட்ரோனை, ஈரானின் அதிநவீன வான் பாதுகாப்புப் படை (Air Defense) உடனடியாக இடைமறித்துச் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் வான் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஈரானின் உடனடி நடவடிக்கை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை