நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் மீதுநம்பிக்கை இல்லா பிரேரணையை முன் வைத்துள்ளனர் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் மீதுநம்பிக்கை இல்லா பிரேரணையை முன் வைத்துள்ளனர். நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களில் சிலவற்றை உள்ளடக்கி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன் நிகழ்நிலைகாப்பு சட்டதினால் சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வரும் அனைவருக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்காது, சபாநாயகர் நாடாளுமன்றத்தில் கையளித்து இருக்கக் கூடாது.
இருப்பினும் அவர் அதற்கான ஒப்புதலை அளித்திருக்கிறார். இதன் காரணமாகவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.