Friday, Jan 17, 2025

பாண் மற்றும் பணிஸ் விலை குறையாது- இலங்கை பேக்கரி சங்கம் அறிவிப்பு

By Jet Tamil

எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை தற்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் குறைக்கப்பட்டபோது பேக்கரி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவோ குறைக்கவோ இல்லை எனவும் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ள.

பேக்கரிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் பட்சத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கான சலுகையை மக்களுக்கு வழங்குவதற்காக பாண், கேக் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு