யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்டிப் பொங்கல் பண்டிகை!
தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் பட்டிப்பொங்கல் பண்டிகை அனுஷ்டிப்பது வழமை.
உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும், காளைகளுக்கும் நன்றி செலுத்தும் முகமாக இந்த பண்டிகை தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்றையதினம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதன்போது பொங்கல் பொங்கி, ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, பசுக்களுக்கு பொங்கல் ஊட்டி பட்டிப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.