அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு! ஏப்ரல் 15 முதல் அரசாங்க அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்
எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.
குறித்த தினங்களில் அரச ஊழியர்கள் இணையவழியில் (Online) பணியாற்றுவதற்கு முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தற்போது அந்தத் தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கான சேவைகளை எவ்விதத் தடையுமின்றி வினைத்திறனாக வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று அலுவலகங்களுக்குச் சமுகமளித்துத் தங்களது கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.





