Welcome to Jettamil

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை! ரமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

Share

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை! ரமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஒரு மாத கால புனித நோன்பை நிறைவு செய்து, ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரமழான் என்பது வெறும் உணவைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அது பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் பிறரின் துன்பங்களை உணர்ந்து கொள்ளும் உன்னத மனிதாபிமானப் பண்புகளை வளர்க்கும் காலம் என அவர் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் இங்குச் சகோதரத்துவத்துடன் பெருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் துரதிர்ஷ்டவசமான போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை அவர் வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிவாரணங்களை வழங்குவதும், அமைதியை நிலைநாட்டுவதும் உலகச் சமூகத்தின் பொறுப்பு எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நிலவும் பன்முகத்தன்மையே நாட்டின் பலம் எனக் குறிப்பிட்ட பிரதமர், ரமழான் கற்றுத்தரும் சகவாழ்வுப் பாடமானது அனைத்து இன மக்களையும் ஒரே கொடியின் கீழ் அணிதிரள ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை