Welcome to Jettamil

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு! ஈரான் – அமெரிக்கா இடையே 2 வார கால போர்நிறுத்தம்

Share

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு! ஈரான் – அமெரிக்கா இடையே 2 வார கால போர்நிறுத்தம்

உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியிருந்த ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஒரு பாரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்வழிப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் முன்வைத்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவை அமெரிக்காவும் ஈரானும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 10-ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன.

இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என்று மிரட்டிய சில மணிநேரங்களிலேயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் போர்நிறுத்தமானது லெபனான் உட்பட அனைத்துப் பிராந்தியங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் நிபந்தனைகளை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டது அமெரிக்காவின் “அவமானகரமான பின்வாங்கல்” என ஈரானிய அரசுத் தொலைக்காட்சி வர்ணித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருந்த ஏற்ற இறக்கங்கள் சீராகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த இரண்டு வார கால அவகாசத்தை ஈரான் மற்றும் அமெரிக்கா எப்படிப் பயன்படுத்தப் போகின்றன என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது.

பாகிஸ்தானின் இந்த இராஜதந்திர முயற்சி மூன்றாம் உலகப் போருக்கான ஆபத்தைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை