இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த பாடசாலை மாணவர் ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த மாணவர் காலியை வசிப்பிடமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 272,682 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை குறித்த மாணவர் திருடியுள்ளார்.
அதற்கான ரிசல்ட் டாகுமெண்ட்டை டவுன்லோட் செய்து தனி இணையதளம் மூலம் தேர்வர்களின் பெயரை உள்ளிட்டு உடனடியாக முடிவுகளைப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில், இந்த மாணவர் சுமார் 5000 உறுப்பினர்களைக் கொண்ட இணையதள ஹேக்கிங் குழுவில் உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.