முன்னதாக 14 நாட்களாக இருந்த ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் காலத்தை 30 நாட்களாக நீட்டிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாகவும் பயணிகளுக்கு உயர் சேவையை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் 13ம் தேதி முதல் பயணிகள் ரயிலில் இருக்கைகளை 30 நாட்களுக்கு முன் பதிவு செய்யலாம்.