Welcome to Jettamil

என்னைச் சிறையில் அடைக்க கோட்டாபயவுக்கு ஸ்கெட்ச் போட்டதே சுரேஷ் சலேதான்! – சரத் பொன்சேக்கா குற்றச்சாட்டு!

sarath

Share

என்னைச் சிறையில் அடைக்க கோட்டாபயவுக்கு ஸ்கெட்ச் போட்டதே சுரேஷ் சலேதான்! – சரத் பொன்சேக்கா குற்றச்சாட்டு!

மதுபாட்டிலுக்கும் சோற்றுப் பார்சலுக்கும் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்திற்கும் ஆசைப்பட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகளைப் பரப்பி ராஜபக்ஷாக்களுக்கு முட்டுக்கொடுக்கும் நபர்களைச் சாடியுள்ள ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, தனக்கு நேர்ந்த பழிவாங்கல்களை விவரித்துள்ளார்.

எவ்விதக் குற்றச்சாட்டுகளோ அல்லது முறையான நீதிமன்ற விசாரணைகளோ இன்றி, கடற்படைத் தலைமையகத்தில் சுமார் 8 மாதங்கள் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பலகைகளால் முற்றாக அடைக்கப்பட்ட ஒரு சிறிய அறையிலேயே தான் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அவர், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் முகாம்களின் கொடுமைகள் குறித்துச் சலேவுக்கு முழுமையான அறிவு உண்டு என்றார்.

மேலும், தான் கைது செய்யப்பட்ட தினத்தன்று, தனது மனைவியைக் காலை 4 மணி வரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தடுத்து வைத்து விசாரணை என்ற பெயரில் பழிவாங்கியதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய சரத் பொன்சேக்கா, சுரேஷ் சலே மற்றும் கபில ஹெந்தவிதாரண போன்றவர்களின் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டே, கோட்டாபய ராஜபக்ஷ தங்களைச் சிறையில் அடைத்துப் பழிவாங்கினார் என்று நேரடியாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தத் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் தன் மீது மட்டுமன்றி, தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தினர் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை