Welcome to Jettamil

சுரேஷ் சலேவின் கைது ஒரு தேசத்துரோகம்! – கொந்தளிக்கும் சரத் வீரசேகர!

Share

சுரேஷ் சலேவின் கைது ஒரு தேசத்துரோகம்! – கொந்தளிக்கும் சரத் வீரசேகர!

முன்னாள் அரச புலனாய்வுச் சேவைத் தலைவர் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு “தேசத்துரோகச் செயல்” என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26.03.2026) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த ஒரு வீரனை, அதே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வது வேடிக்கையானது என்றும், இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டினார்.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், இந்தத் தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலோ அல்லது ஏனைய உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கைகளிலோ சுரேஷ் சலேவின் பெயர் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

எவ்வித ஆதாரமும் இன்றி புலனாய்வுத் துறை அதிகாரிகளைக் கைது செய்வது நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை