Welcome to Jettamil

கிம் ஜொங் உன்னிற்கு துப்பாக்கியைப் பரிசளித்த பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ!

Share

கிம் ஜொங் உன்னிற்கு துப்பாக்கியைப் பரிசளித்த பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ!

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) தனது 33 ஆண்டுகால ஆட்சியில் முதன்முறையாக வடகொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னிற்கு பெலாரஸ் தயாரிப்பான VSK ரகத் தானியங்கி துப்பாக்கி ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

துப்பாக்கியுடன் சேர்த்து பெலாரஸின் பாரம்பரியக் கறுப்புப் பாண், சாக்லேட்டுகள் மற்றும் இனிப்பு வகைகளையும் லுகாஷென்கோ வழங்கினார்.

இதற்குப் பதிலாக, கிம் ஜொங் உன் லுகாஷென்கோவிற்கு ஒரு வாள் (Sabre), அழகிய பூச்சாடி மற்றும் அவரது உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் ஒன்றையும் பரிசளித்தார். இந்தச் சந்திப்பின் ஒரு அங்கமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் “நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு” ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் வடகொரியாவும் பெலாரஸும், உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை