சுழிபுரத்தில் கசிப்புடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் 12 போத்தல் கசிப்புடன் கைதான சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றுமுன்தினம் (06) கைது செய்த நிலையில், விசாரணைகளின் பின்னர் நேற்றையதினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இதன்போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.