உழவு இயந்திரத்தை பின்னால் மோதிய பேருந்து – இருவர் மருத்துவமனையில்!
இன்று காலை, வீதியில் பயணம் செய்துகொண்டிருந்த உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக வந்த தனியார் பேருந்து ஒன்று உழவு இயந்திரத்தை மோதித் தள்ளியது. இந்த சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.